தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
‛கேப்டன் மில்லர்' படத்திற்கு பின் ‛ராயன்' படத்தை இயக்கி அதில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். அதையடுத்து தனது சகோதரி மகன் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தனுஷின் 51வது படமாக உருவாகும் இந்தபடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் மகா சிவராத்திரியான இன்று மார்ச் 8ம் தேதி இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. முதலில் மாலை 4:05 மணிக்கு வெளியிடுவதாக சொன்னார்கள். தொழில்நுட்ப பிரச்னையால் மாலை 6:30 மணிக்கு வெளியிட்டார்கள்.
படத்திற்கு ‛குபேரா' என பெயரிட்டுள்ளனர். சுவர் ஒன்றில் கடவுள் சிவன் யாசகம் பெறுவது போன்ற ஓவியம் வரைந்து இருக்க, அதன் அருகில் அழுக்கான கிழிந்த ஆடை, தாடி எல்லாம் வைத்து ஒரு பிச்சைக்காரர் போன்ற தோற்றத்தில் தனுஷ் உள்ளார். தனுஷின் தோற்றம், படத்தின் தலைப்பு நேர் எதிராக உள்ளது. ஒருவேளை படத்தின் கதைக்களமே இதுபற்றி கூட பேசலாம். படத்தின் டைட்டில் போஸ்டர் 4 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.