துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தனுஷ் நடித்த ‛3' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அதன்பிறகு கவுதம் கார்த்திக் நடித்த ‛வை ராஜா வை' என்ற படத்தை இயக்கியவர், பின்னர் சமீபத்தில் திரைக்கு வந்த ‛லால் சலாம்' என்ற படத்தையும் இயக்கினார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினி அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛அனிருத், 3 படத்தில் இசையமைப்பாளர் ஆனதற்கு முழு காரணமே தனுஷ்தான்' என்று கூறி இருக்கிறார்.
‛‛அனிருத்தை அவரது பெற்றோர் மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்ப திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அனிருத்தின் இசை திறமையை பார்த்த தனுஷ்தான் அவருக்கு கீப்போர்டு வாங்கி கொடுத்தது மட்டுமின்றி நான் இயக்கிய 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்தார். அதனால் அனிருத் சினிமாவிற்கு வருவதற்கு தனுஷ்தான் முதல் காரணம். அதே சமயம் அவர் இத்தனை பெரிய இசையமைப்பாளர் ஆனதற்கு முழுக் காரணம் அவரது திறமைதான். அந்த வகையில் அனிருத்தின் இந்த வளர்ச்சி எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது'' என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.