தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் இயக்குனரான அட்லீ ஹிந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தின் மூலம் அட்டகாசமான இயக்குனர் என்ற பெயரை பாலிவுட்டிலும் பெற்றுள்ளார். ஆயிரம் கோடிக்கும் அதிகமாக அந்தப் படம் வசூல் செய்ததே அதற்குக் காரணம்.
அட்லீயின் அடுத்த படமாக அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படம்தான் தயாராகப் போகிறது என்ற தகவல்கள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படமும் பான் இந்தியா படமாகவே இருக்க வேண்டும் என அல்லு அர்ஜுன் நினைக்கிறாராம். இப்படத்திற்காக அட்லீக்கு 60 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இதன்மூலம் தமிழ் இயக்குனர்களில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர் என்ற பெருமையைப் பெறுகிறார் அட்லீ. அவரது குருநாதரான ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்க இயக்கி வரும் 'கேம் சேஞ்சர்' படத்திற்காக 50 கோடி சம்பளம்தான் வாங்குகிறாராம். 'ஜவான்' படத்திற்குப் பிறகு குருவை மிஞ்சிய சிஷ்யனாக அட்லீ மாறிவிட்டார் என கோலிவுட்டிலும் சிலர் பொறாமையுடன் பேசிக் கொள்வதாகத் தகவல்.