வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் , திஷா பதானி ஆகியோருடன் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'கல்கி 2898 எடி'. இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என ஜனவரி 12ம் தேதியே அறிவித்துவிட்டார்கள்.
ஆனால், அத்தேதியில் படம் வெளிவருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களின் பார்லிமென்ட் தேர்தல் மே 13ம் தேதியன்றும், ஆந்திர சட்டசபைத் தேர்தலும் அதே தேதியில் நடக்கும் என்றும் அறிவித்துள்ளார்கள். மே 9ம் தேதி தேர்தல் ஜுரம் பரபரப்பான கட்டத்தில் இருக்கும்.
தெலுங்கு மொழி பேசும் மக்களான தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில்தான் 'கல்கி 2898 எடி' படத்திற்கான வசூல் மிக அதிகமாக இருக்கும். தேர்தல் ஜுரம் இருக்கும் சமயம் படம் வெளியானால் அது படத்தின் வசூலை நிச்சயம் பாதிக்கும். எனவே, படக்குழுவினர் புதிய வெளியீட்டுத் தேதியைத் தேட வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற படங்களின் வெளியீடுகளுக்கும் சிக்கல் வரலாம்.