‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' | தமிழ் ரசிகர்கள் திறமையை அங்கீகரிப்பவர்கள் : அர்ஷா பைஜு | பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' |
நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் சில மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தி ப்ரூப் என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் ராதிகா இந்த படத்தை இயக்கி உள்ளார். ரித்விகா, அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதில் சண்டைக் காட்சியில் ஒருவரது நெஞ்சில் தன்ஷிகா ஆவேசமாக கால் வைத்து நிற்பது போன்று அந்த போஸ்டர் காட்சி இடம் பெற்றுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.