தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பொதுவாக ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அதிகபட்சம் 3 மணி நேரம் நடக்கும். பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தால் 4 மணி நேரம் நடக்கும். ஆனால் பார்த்திபன் தான் தற்போது உருவாக்கி வரும் 'டீன்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை கமலா தியேட்டரில் 10 மணி நேரம் நடத்தி சாதனை படைத்திருக்கிறார். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த விழா இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது.
இதனால் ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக நேரம் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே தணிக்கை சான்று வாங்கி அதிலும் சாதனை படைத்தது இந்த படம்.
13 சிறுவர்களை மையமாகக் கொண்ட கதை என்பதால் விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது. விழாவில் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், பூர்ணிமா பாக்யராஜ், 'டீன்ஸ்' தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், பாடலாசிரியர் மதன் கார்கி, கே.எஸ்.ரவிக்குமார், நடிகை அக்ஷயா உதயகுமார், வனிதா விஜயகுமார், கவுரவ் நாராயணன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், விதார்த், பேரரசு, ரோபோ சங்கர், யோகி பாபு, கே பாக்யராஜ், தம்பி ராமையா, இசையமைப்பாளர் இமான் உள்பட பலர் பேசினார்கள்.