நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி. இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காவிட்டாலும் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டியுடன் தலா ஐந்து படங்களில் இணைந்து நடிக்கும் அளவிற்கு அங்கே அவருக்கு மலையாள ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். அந்த வகையில் கடந்த 2018ல் ‛ஒரு குட்டநாடன் பிளாக்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் ராய் லட்சுமி.
இந்த நிலையில் தற்போது ஆறு வருடங்கள் கழித்து ‛டிஎன்ஏ' என்கிற படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரை உலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ராய் லட்சுமி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் ரேச்சல் புன்னூஸ் என்கிற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராய் லட்சுமி.
கடந்த இரண்டு வருடங்களாக லெஜன்ட், போலா ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிச் சென்ற ராய் லட்சுமி இந்த படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக தனது பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கலாம். இதற்கு முன்னதாக 2021ல் கன்னடத்தில் வெளியான ஜான்சி ஐபிஎஸ் என்கிற படத்திலும் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.