‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை |
கடந்த ஆண்டில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளிவந்த படம் ' அயோத்தி ' இப்படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. முதல்படத்திலேயே கவனம் பெற்று மந்திர மூர்த்தியின் அடுத்த படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இவரின் அடுத்தபடம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை பிரபல பைனான்சியரும், கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்கிறார் என அறிவித்துள்ளனர். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற விபரங்கள் வெளியாகவில்லை. முதல்படத்தை போலவே இந்தப்படமும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் தயாராகிறது.