சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திகரனி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‛ரத்னம்' படம் நாளை(ஏப்., 26) வெளியாகிறது. அதிரடி ஆக் ஷன் படமாக வெளியாகிறது. இந்த படத்திற்காக பம்பரமாய் சுழன்று புரொமோஷன் செய்துள்ளனர் விஷால், ஹரி. இந்நிலையில் இந்த படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛ரத்னம் படத்திற்கான விநியோக தொகை பாக்கியை தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் படம் வெளியாகும் என அங்குள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. இதுபற்றி பேச முயன்றால் என் அழைப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இப்படி செய்வது கட்டப்பஞ்சாயத்துக்கு சமமானது. எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு என்ன கதியாகும்'' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஷால் அளித்த ஒரு பேட்டியின் போது தனது மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும்படி ரெட் ஜெயன்ட் நிறுவனம் கூறியதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த பிரச்னையால் தனது ரத்னம் படத்திற்கு கூட பிரச்னை வரலாம் என தெரிவித்து இருந்தார்.