துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை அடுத்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு மாற்றம் என்ற பெயரில் மே ஒன்றாம் தேதி முதல் புதிய சேவை அமைப்பை தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த நிலையில் அவருடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இணைந்து நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஜிகர்தண்டா படத்தில் நடித்தபோது நானும், லாரன்ஸூம் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அவர் எனக்கு நண்பராக கிடைத்தது பெரும் மகிழ்ச்சி என்று கூறி இருக்கும் எஸ்.ஜே. சூர்யா, மே 1ம் தேதி முதல் மாற்றம் என்ற அமைப்பை லாரன்ஸ் தொடங்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் அவரது அமைப்பில் கைகோர்க்க உள்ளேன். அவர் சொல்லும் அனைத்து விஷயத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் நிகழ்வில் அவருடன் இணைந்து, அவர் கைகாட்டும் நபர்களுக்கு உதவி செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.