வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து கோட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருவதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருக்கிறது. அதற்கு ஏற்றபடி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் டீசரையும் வெளியிட்டிருந்தார்கள்.
சமீபத்தில் வெங்கட் பிரபு தனது சோசியல் மீடியா பதிவு ஒன்றில் எல்லா மாஸ் கமர்சியல் படங்களின் டிரைலர்களுமே ஒரே மாதிரியான டிரைலர்கள் தான்.. ஹீரோக்கள் அனைவருமே ஒரே மாதிரியான மாஸ் கலந்த வார்த்தைகளில் பேசும் ஒரே விதமான பஞ்ச் வசனங்கள் கொண்ட டிரைலர்கள் தான் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் இவரது பதிவு சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகும் கூலி படத்திற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் குறித்து தான் என்று நினைத்த ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபுவுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
உடனடியாக இதுகுறித்து பதில் அளித்த வெங்கட் பிரபு, “இல்லை இல்லை.. அப்படியெல்லாம் இல்லை.. நாங்கள் எல்லோருமே கமர்சியல் படங்களை செய்து கொண்டிருக்கிறோம். அதனால் அப்படி சொன்னதிலும் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அதே சமயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் நாங்களும் வழக்கமான கமர்சியல் வடிவத்தில் இருந்து மாறி கொஞ்சம் வித்தியாசமாக கொடுக்க முயற்சிக்கிறோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.