தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக, குறிப்பாக நகைச்சுவை படங்களை இயக்குவதில் வல்லவராக வலம் வருபவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் எடுத்து வரும் அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் வரும் மே மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சுந்தர் சி. அப்படி ஒரு நிகழ்வில் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ஒரு தகவலை சொல்கிறேன் என தனது மனைவி குஷ்பு பற்றிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார் சுந்தர்.சி.
அதாவது குஷ்பு நடிகையாக இருந்தபோது இயக்குனர் சுந்தர் சியும் அவரும் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். “நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த சமயத்தில் குஷ்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார். இது குறித்து என்னிடம் புலம்பிய குஷ்பு நீங்கள் வேறு யாராவது நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூட கூறினார். அதன்பின்னர் நாங்கள் இருவருமே நமக்கு திருமணம் ஆனால் குழந்தை பிறக்காது, நமக்கு நாம்தான் குழந்தை என மனதளவில் தயாராகி விட்டோம். ஆனால் திருமணமானபின் ஆண்டவனின் எண்ணம் வேறாக இருந்தது. ஒன்றுக்கு இரண்டாக அழகான பெண் குழந்தைகள் பிறந்தன” என்று கூறியுள்ளார்.