தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை குறைத்துக் கொண்டு கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் தரும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் பெண்குயின், குட்லக் சகி, சாணிக்காயிதம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட சில படங்களில் கதையை தாங்கி நடிக்கும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் ரிவால்வர் ரீட்டா படத்தில் இதுவரை ஏற்று நடத்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக நடிகர் ரெடின் கிங்ஸிலியுடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.
சி.எஸ் அமுதன், வெங்கட் பிரபு ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சந்துரு என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள கீர்த்தி சுரேஷ், “படக்குழுவினருக்கு நன்றி.. இந்த படத்தில் சில ஆச்சரியமான விஷயங்களை வைத்திருக்கிறோம்.. அனைவரையும் மனம் விட்டு சிரிக்க வைப்பதற்காக எங்களால் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.