தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ்நாட்டை சேர்ந்த அனல் அரசு இந்திய சினிமாவின் முன்னணி சண்டை இயக்குனராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழில் சிங்கம் 1, சிங்கம் 2, கத்தி, மெர்சல், பிகில் உள்பட பல படங்களில் பணியாற்றியவர் அடுத்து வெளியாக உள்ள இந்தியன் 2 போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.
ஹிந்தியில் ‛ரவுடி ரத்தோர், தபாங் 2, தபாங் 3, சுல்தான், ரேஸ் 3' சமீபத்திய மெகா ஹிட் திரைப்படமான 'ஜவான்' போன்ற படங்களிலும் பணியாற்றி உள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவை கதாநாயகனாக நடிக்க உருவாகும் 'பீனிக்ஸ்' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் 'ஜவான்' படத்தில் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றியதற்கு சர்வதேச விருதான 'டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருது' பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதே பட்டியலில் ஹாலிவுட் படங்களான ஜான்விக் சாப்டர்-4, மிஷன் : இம்பாசிபிள் டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன் 2, பேல்லரினா போன்ற படங்களும் இடம் பெற்றுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள அனல் அரசு அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது: ஜவான் திரைப்படத்தை ஒரு ஹிந்தி திரைப்படமாக பார்க்காமல், இந்திய திரைப்படமாகத்தான் நான் பார்க்கிறேன். அது தேர்வாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த விருது விலை மதிப்பற்ற தலைசிறந்த ஒன்றாகும். நடிகர் ஷாருக்கான்,வருண் தவான்,ஷாஹித் கபூர், அட்லி உட்பட முன்னனணித் திரைக்கலைஞர்கள் இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றதும், இதற்காக நான் அமெரிக்கா செல்வதுமே ஒரு வெற்றிதான்.
திரைப்பட சண்டை பயிற்சி கலைஞர்களுக்கான பாதுகாப்பு தரம் முன்பை விட தற்போது உயர்ந்துள்ளது. தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துள்ளதால் சண்டைக்காட்சிகளில் தரமும் உயர்ந்துள்ளது. மேலும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும், அவர்கள் குடும்பத்திற்கு முக்கியம் என்பதால் அனைவரது பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அனைத்து காட்சிகளும் உருவாக வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். என்றார்.