தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது படத்தின் விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அவற்றைப் பார்வையிட படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இதனிடையே படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது. ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றிற்றகான உரிமைகள் மிகப்பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
தியேட்டர் உரிமைகளையும் விஜய்யின் முந்தைய படமான 'லியோ' படத்தை விடவும் அதிக விலைக்கு விற்கவே முயற்சித்து வருகிறார்களாம். இந்தப் படம் தவிர இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க உள்ளார். அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்கப் போகிறார். எனவே, இந்தப் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.