துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர் ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில் ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஒரு கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பாலா, பல முன்னணி நடிகர்கள் குரலில் மிமிக்ரி பேசியதோடு, பாடலுக்கு நடனமாடியும் மாணவ மாணவிகளை மகிழ்ச்சி படுத்தியிருக்கிறார்.
அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, இந்த ஊரும் இங்குள்ள மக்களும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது . நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற மனநிலையுடன் நான் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சிலர் எனக்கு பின்னாடி யாரோ இருப்பது போலவும், கருப்பு பணத்தை நான் வெள்ளை பணமாக மாற்றி வருவது போலவும் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிடுகிறார்கள். ஆனால் மூன்று வேளை உணவுக்கே கஷ்டப்பட்ட நான் தற்போது எனக்கு அது கிடைத்திருப்பதால் நம்மால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
பல கஷ்டங்கள், அடி, வலி என பலவற்றை கடந்துதான் நான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். அதோடு எனக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தோள் கொடுத்து வருகிறார். அதனால் தான் இன்னும் நிறைய பேருக்கு என்னால் உதவி செய்ய முடிகிறது என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகர் பாலா.