வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுவாகவே வெங்கட் பிரபுவின் ஆதர்ச நடிகர்களாக இருக்கும் பலரும் அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். அந்த வகையில் சரோஜா படத்தின் மூலம் வெங்கட் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் வைபவ்வும் வழக்கம் போல இந்த கோட் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.
பொதுவாகவே வெங்கட் பிரபு தனது படங்களை பற்றி எந்த விபரங்களையும் வெளியிடாமல் அடக்கி வாசித்தாலும் அவரது குழுவைச் சேர்ந்த சில ஆஸ்தான நடிகர்கள் மூலம் படம் பற்றிய ஏதாவது தகவல்கள் எதிர்பாராமல் கசிந்து விடும். அந்த வகையில் சமீபத்திய ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் வைபவ் கோட் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசும்போது, “இந்த படத்தில் விஜய் இரண்டு வித கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் இளம் பருவ விஜய்யுடன் அவரது நண்பராக இணைந்து நடித்துள்ளேன்” என்று இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் விஜய்க்குமான தொடர்பு குறித்து கூறியுள்ளார் வைபவ்.