ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! |

யேசுதாசின் குரலை 'காந்த குரல்' என்பார்கள். அதேபோன்று பெண்களின் குரலில் காந்த குரல் கொண்டவர் ஜென்சி. ஒருவர் எந்த பாடலை பாடினாலும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிற குரலையே காந்த குரல் என்பார்கள். கேரளாவில் மேடைகளில் பாடிக்கொண்டிருந்த ஜென்சியை இளையராஜாவிடம் அழைத்து வந்தார் யேசுதாஸ்.
“ஒரு பொண்ணு இருக்காங்க. அற்புதமான குரல். நீங்க ஒரு தடவை கேளுங்க. பிடிச்சுருந்தா உங்க இசையில் பயன்படுத்திக்கங்க'' இதுதான் இளையராஜாவிடம், பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சொன்னது. திறமையற்றவர்களை யேசுதாஸ் பரிந்துரை செய்யமாட்டார் என்பதால் ஜென்சியை பாடகியாக ஏற்றார் இளையராஜா. 'திருப்புரசுந்தரி' என்ற படத்தில் முதல் பாடல். அது அதிக கவனம் பெறவில்லை. இரண்டாவது பாடல் 'முள்ளும் மலரும்' படத்தில் இடம்பெற்ற ''அடி பெண்ணே'' தான் ஜென்சியை அடையாளம் காட்டியது.
அறிமுகமான அந்த 1978ம் வருடத்திலேயே அடுத்தடுத்து 5 பெரிய படங்களில் பாடினார். அதில் ஒரு பாடல் பிரியா படத்தில் வரும் “என்னுயிர் நீதானே'' பாடல். அவரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யேசுதாசுடன் இணைந்து பாடிய அந்தப்பாடல்தான் ஜென்சியின் மனதுக்கு நெருக்கமான பாடல் என்று அவரே கூறியிருக்கிறார்.
அதன்பிறகு ஜென்சி பாடியது எல்லாமே தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்தான். இங்கிருந்த பி.சுசீலா, எஸ்.ஜானகிக்கு நிகராக வளர்ந்த ஜென்சி திடீரென காணாமல் போனார். ஒரு பாடல் பதிவுக்காக இளையராஜா அழைக்க, அவசர அவசரமாக கேரளாவில் இருந்து ரயிலில் கிளம்பினார் ஜென்சி. ரயில் தாமதமானதால் பாடல் பதிவு நேரத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. அந்த பாடலை வேறு பாடகியை வைத்து முடித்து விட்டார் இளையராஜா.
தாமதத்திற்கு மன்னிப்பு கேட்ட ஜென்சி, ரயில் தாமதம் பற்றி இளையராஜாவிடம் சொன்னார். “நீ ரயிலில் பாடி பிழைச்சுக்கோ” என்று இளையராஜா சொல்லிவிட அந்த வார்த்தையை தாங்க முடியாமல் வெளியேறியவர், கேரளாவுக்கே சென்று விட்டார். அதன்பிறகு சில பாடல்கள் பாடினாலும் இளையராஜாவை பகைத்து கொள்ள விரும்பாதவர்கள், ஜென்சியை புறக்கணித்தார்கள். பின்னர் அவர் வருங்கால இசை கலைஞர்களான மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுக்கும் பணியை தேர்வு செய்து கொண்டார்.