'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் இன்றைய தினம் தங்களது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், ‛இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றது தான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களின் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள். தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா. திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தை சேர்த்து விடும் அன்புத்தம்பி மணிரத்னம் பிறந்த நாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலை சொந்தம் என்றென்றும் தொடர்க,' என்று பதிவிட்டு அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருக்கிறார் கமலஹாசன்.