துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சினிமா பிரபலங்கள் பலரும் சுற்றுலா என்றால் வெளிநாடுதான் செல்வார்கள். நம் நாட்டில் உள்ள பல இடங்களுக்கும் அவர்கள் சென்றால் அந்த இடங்களும் ஓரளவிற்கு பிரபலமாகும். ஆனால், வேறு வெளிநாடுகளுக்குச் சென்று அந்த இடங்களைப் பிரபலமாக்குகிறார்கள் சிலர்.
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா வித்தியாசமாக நம் நாட்டிலேயே சுற்றுலா சென்றுள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மலைப் பிரதேசமான சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அதன் புகைப்படங்களை சிலவற்றைப் பகிர்ந்து, “சிக்கிம் இதுவரை... மிகவும் சாகசமாக உள்ளது!!! காங்டாக்கிலிருந்து லாச்சுங்கிற்குச் செல்ல திட்டமிட்டோம், ஆனால் நிலச்சரிவு காரணமாக, சாலைகள் தடைபட்டன, அதற்கு பதிலாக பெல்லிங்கிற்குச் சென்றோம், அது இப்போது சிக்கிமில் எனக்குப் பிடித்த இடமாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களுக்கு நமது மக்கள் சுற்றுலா சென்றால் அந்த மாநிலங்களும் வளர்ச்சி பெறும். ஆண்ட்ரியாவைத் தொடர்ந்து மேலும் சில சினிமா பிரபலங்கள் இதைச் செய்தால் நல்லது.