நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி |

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், ராணா, திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛கல்கி 2898 ஏ.டி'. அறிவியல் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் புஜ்ஜி என்ற ஒரு ரோபோ கார், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. இந்த ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்திருக்கிறார்.
கமல் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை டிஏஜிங் தொழில் நுட்பத்தின் மூலம் இளமையாக மாற்றியுள்ளனர். இப்படத்தில் அவர் அசுவத்தாமன் என்ற ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த கல்கி படத்தின் டிரைலர் ஜூன் 10ம் தேதியான நாளை வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படம் இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வருகிறது.