தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்தவர் பிரதீப் கே விஜயன். ‛சொன்னா புரியாது' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தெகிடி, இரும்புத்திரை, ஒரு நாள் கூத்து, மீசைய முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தாண்டி படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்து தரும் பணியையும் செய்து வந்தார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக இவரது நண்பர்கள் இவரை அலைப்பேசியில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் வீட்டிற்கு வந்து அவரது நண்பர்கள் பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து போலீசாரின் உதவியோடு உள்ளே சென்று பார்த்தபோது பிரதீப் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. உடலில் அவருக்கு பிரச்னை எதுவும் இருந்ததா, மருந்து எதுவும் எடுத்து வந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்த பிரதீப்பின் உடன் பிரேத பரிசோதனைக்காக சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதீப்பின் திடீர் மறைவு, அதுவும் அவர் இறந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் கடந்தது சினிமா பிரபலங்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்களும், அவருடன் பணியாற்றியவர்களும் வலைதளங்களில் இரங்கல் பதிவிட்டுள்ளனர்.