தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள திரையுலகில் திரிஷ்யம் படம் மூலமாக மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியை உருவாக்கினார்கள் நடிகர் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும். தொடர்ந்து திரிஷ்யம்-2, டுவல்த்மேன், நேர் என இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வகையில் நான்கு வருடங்களுக்கு முன் ராம் என்கிற படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் ஆரம்பித்தனர். ஆனால் கொரோனா காலகட்டம் துவங்கிய நிலையில் அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இவர்கள் கூட்டணியில் மூன்று படங்கள் வெளியாகி விட்டாலும் ராம் படம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ராம் படத்தின் தயாரிப்பாளர் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது என்றும், இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாக இருக்கிறது என்றும் உறுதியாக கூறியிருந்தார். இந்த படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட இருக்கிறது. மோகன்லால் இதில் ஒரு ரகசிய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதனால் இந்த படத்தில் மோகன்லாலுக்காக அவரது ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் விதமாக அதேசமயம் வழக்கமான பாணியில் இல்லாமல் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி பாடல் போல ஆங்கிலத்திலேயே தீம் சாங் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் வினாயகன் சசிகுமார் என்பவர் எழுதியுள்ளார். இந்த தகவலையும் சமீபத்தில் அவரை கூறியுள்ளார்.