வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி தற்போது முற்றிலும் புதிதாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. இதுவரை சமையல் கலைஞர்களை வைத்தோ சமைக்க தெரிந்த பிரபலங்கள் வைத்தோ ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகள் மத்தியில், சீரியலில் மக்களுக்கு பேவரைட்டான ஹீரோயின்கள் மட்டும் சமைக்கும் புதிய நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தியுள்ளது.
சமையல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியானது தொலைக்காட்சியில் இல்லாமல் யூ-டியூபில் ஒளிபரப்பாகும் என்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த சமையல் நிகழ்ச்சி ஜூன் 19ம் தேதி மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.