மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் |
சினிமா இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு சென்னையில் கடந்த பிப்., 18ல் தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தினா மற்றும் சபேசன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் இரண்டு முறை தலைவராக இருந்த தினா தோல்வி அடைந்தார். சபேசன் வெற்றி பெற்று புதிய தலைவராக தேர்வானார். மேலும் பொதுச் செயலாளராக முரளி, பொருளாளராக சந்திரசேகர், துணை தலைவர்களாக பத்மஸ்ரீ பாலேஷ், மூர்த்தி மற்றும் ரகுராமன் ஆகியோரும், இணை செயலாளர்களாக செல்வராஜ், வெங்கடேஷ் மற்றும் முகமது ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் பொருளாளர் சந்திரசேகர், துணை தலைவர் பாலேஷ் தவிர்த்து தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட ஒட்டு மொத்த நிர்வாகிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று(ஜூன் 22) மதியம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதுபற்றி விசாரித்ததில் தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக தனியாக டிரஸ்ட் உள்ளது. இதில் முன்னாள் தலைவர் தினா உள்ளிட்ட இருவர் அங்கம் வகிக்கின்றனர். ஏற்கனவே சங்கத்தின் தலைவராக தினா இருந்தபோது முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்படியிருக்கையில் அவர்களுடன் இணைந்து பணி செய்வது என்பது தற்போதைய நிர்வாகிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்துள்ளதாம். இது தொடர்பாக எழுந்த பிரச்னையால் ஒட்டு மொத்த புதிய நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளதாக கூறுகிறார்கள்.
தமிழ் சினிமாவின் பாரம்பரிய சங்கமான தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள் ராஜினாமா செய்திருப்பது திரையுலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி பெப்சி உடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.