கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தில் அறிமுகமாகி கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவருக்கென ஒரு தனி பாதையை தமிழ் சினிமாவில் அமைத்துக் கொண்டுள்ளார். தயாரிப்பாளரின் மகன், இயக்குனரின் தம்பி என வாரிசு நடிகராக இருந்தாலும் அவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்த ஒன்று.
2009ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரவி. டிவி சீரியல்களின் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமார் மகள்தான் ஆர்த்தி. ரவி, ஆர்த்தி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இத்தனை வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தம்பதியினரிடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தகவல்.
ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா, மருமகனை கதாநாயகனாக வைத்து “அடங்க மறு, பூமி, சைரன்” ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். இவற்றில் 'அடங்க மறு' மட்டுமே வெற்றிகரமாக ஓடிய படம். இந்த ஆண்டில் வெளிவந்த 'சைரன்' படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது.

கடந்த சில நாட்களாக ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவு விவகாரம் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மாமனார் குடும்பத்தினருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்தான் பிரிவு வரை கொண்டு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இருப்பினும் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்கவும் முயற்சிகள் நடக்கிறதாம். இந்நிலையில் ஆர்த்தி தன் கணவர், மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா தளத்திலிருந்து நீக்கியது இந்த பிரிவு விவகாரத்தை மீண்டும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரது பிரிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதற்கடுத்து ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவும் அதே போன்றதொரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.