துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இலங்கையை சேர்ந்த வீஜே தனுஷிக் தமிழ் சீரியல்களில் நடித்து தமிழ்நாட்டு நேயர்களிடம் பிரபலமாகி வருகிறார். முன்னதாக அன்பே வா, கார்த்திகை தீபம் ஆகிய சீரியல்களில் நடித்துள்ள தனுஷிக் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நன் காதல் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். எதார்த்தமான தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள தனுஷிக், மீடியாவுக்கு வந்த ஆரம்பகால கட்டத்தில் உருவகேலியை சந்தித்தாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர், 'நான் ஸ்ரீலங்காவில் மீடியாவில் வேலை பார்த்து வந்தேன். லட்சியத்தோடு சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்தேன். அப்போது ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் ஆங்கரிங் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அப்போது நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். இதனால் என்னை சர்ஜரி செய்து கொண்டு வர சொன்னார்கள். வாய்ப்பில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. நான் குண்டாக இருக்கிறேன் என்று சொன்னது தான் வேதனையாக இருந்தது. என்னை உருவகேலி செய்ததாக நினைத்து ஆட்டோவில் உட்கார்ந்து கதறி அழுதேன். மீடியா பீல்டை தேர்வு செய்தது தவறான முடிவோ? என வருந்தினேன்' என கூறியுள்ளார்.