நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'கல்கி 2898 எடி' நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்காவில் முதல் நாள் முன்பதிவு, இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக நடந்தது.
நேற்றைய முதல் நாள் வசூல் 5 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்துள்ளது. பிரிமியர் காட்சிகள் மூலம் மட்டும் சுமார் 3.8 டாலர் கிடைத்துள்ளது. பிரிமியர் காட்சிகள் மூலம் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்தின் பிரிமியர் காட்சி வசூலை இப்படம் முறியடித்து சாதனை புரிந்துள்ளது.
உலக அளவில் இப்படம் முதல் நாளில் சுமார் 180 கோடி வசூலித்திருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 115 கோடி, வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என்கிறார்கள். முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் 'ஆர்ஆர்ஆர்' படம் 220 கோடி, 'பாகுபலி 2' படம் 215 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அந்த வரிசையில் 'கல்கி 2898 எடி' படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.