ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகர் ரகுமான் மலையாள திரையுலகில் அறிமுகமானாலும் தமிழில் பாலச்சந்தர் இயக்கிய ‛புது புது அர்த்தங்கள்' படம் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர். தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த அவர், சமீப காலமாக ‛துருவங்கள் பதினாறு, பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராகவும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது மூத்த மகள் ருஸ்தாவின் திருமணம் கடந்த 2021ல் நடைபெற்றது.
இவரது இளைய மகள் அலிஷா சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஒரு நடிகையாக ஆக வேண்டும் என்பதுதான் இவரது எண்ணமாக இருந்தாலும் சினிமாவை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்து தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் படத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் உதவி இயக்குனராக தொடர்ந்து பணியாற்றி வருவதால் நடிகையாக வேண்டும் என்கிற எண்ணமே தற்போது ஞாபகத்தில் வருவதில்லை என்று கூறியுள்ள அலிஷா, நடிகையாக மட்டுமல்ல எதிர்காலத்தில் ஒரு இயக்குனராக எனது பயணம் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.