கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‛இந்தியன் 2'. 1996ல் இவர்கள் கூட்டணியில் இந்தியன் படம் வந்தது. அதன்பின் 28 ஆண்டுகளுக்கு பின் தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்று(ஜூலை 12) வெளியாகி உள்ளது. கமல் உடன் சித்தார்த், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு இன்று ஒருநாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி உட்பட 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் காலை 9 மணிக்கே தியேட்டர்களில் இந்தியன் 2 படம் வெளியானது. இதை கமலின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள கமலின் பேனர்களுக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டு என ரசிகர்கள் கொண்டாடினர்.
தமிழகத்தில் சுமார் 800 தியேட்டர்களில் இந்தியன் 2 படம் வெளியாகி உள்ளது. அதேசமயம் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பிறமாநிலங்களில் அதிகாலையிலேயே படங்கள் வெளியாகின. படத்திற்கு கலவையான விமர்சனங்களை வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.