மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிதா. ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ்.
படம் பற்றி இயக்குனர் சுகன் கூறும்போது, ‛‛காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் அதாவது 23 மணி 23 நிமிட நேரத்தில் ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தை வருகிற 26ம் தேதி வெளியிடுகிறோம்'' என்றார்.