மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுவேதா, அஜ்மல், மோகன், லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார. படப்பிடிப்பு முடிந்து தற்போது கிராபிக்ஸ் உள்ளிட் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் முதல் பிரமோஷன் பணிகள் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான மத கஜ ராஜா என்ற படம் நிதி பிரச்னை காரணமாக கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நிலையில், தற்போது அப்படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விஷால். விஜய்யின் கோட் படம் வெளியாகும் செப்டம்பர் 5ம் தேதி தனது மத கஜ ராஜா படத்தையும் வெளியிட அவர் திட்டமிட்டு இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.