ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூலை 12ல் வெளியான படம் ‛இந்தியன் 2'. இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக படத்தின் நீளம் அதிகம் இருப்பதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து கடந்தவாரம் படத்திலிருந்து 12 நிமிட காட்சியை குறைத்தனர்.
இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டி, ‛‛கூலி பட படப்பிடிப்பு சிறப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான கமலின் இந்தியன் 2 படம் பார்த்தேன். நன்றாக உள்ளது. வேட்டையன் பட டப்பிங் போய் கொண்டு இருக்கிறது. ரிலீஸ் இன்னும் முடிவாகவில்லை'' என்றார்.