தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
தனுஷ் தனது 50வது படமாக 'ராயன்' என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வட சென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ளது. நாளை ஜூலை 26ல் படம் ரிலீஸாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த இருதினங்களாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசிடம் ராயன் படக்குழு ஜந்து காட்சிகளுக்கு அனுமதி கேட்டு வேண்டுகோள் விடுத்தனர். தமிழக அரசும் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ராயன் படம் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணிவரை காட்சிகளைக் திரையிட உத்தரவு விட்டுள்ளனர்.