ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
யுவன் சங்கர் ராஜா 'யு1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் பெயரில் நாளை மாலை (27ம் தேதி) சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் எனும் நிறுவனம் இதை நடத்துகிறது. பின்னணி பாடகர்கள் ஆண்ட்ரியா, ஹரி சரண், பிரேம் ஜி, ராகுல் நம்பியார், ஹரிப்பிரியா, திவாகர், ரிஷா, ஆதித்யா , ஸ்ரீ நிஷா, எம்சி சனா உள்ளிட்ட பாடகர்கள், பாடகிகள் பாடுகிறார்கள். முதன் முறையாக வெளிநாட்டு பாணியில் 360 டிகிரி வடிவிலான மேடையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் 35 க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெறுகிறது அதில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை யுவன் சங்கர் ராஜாவே பாடுகிறார்.
இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும், ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். அதனால் 360 டிகிரி மேடையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த புது அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன்.
எனது இசை பயணத்தில் நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். என்னை பற்றி வரும் விமர்சனங்களை இலகுவாக எடுத்துக் கொள்வேன். அவற்றை கவனிப்பேன். என்னுடைய பாடல்கள் எல்லாமே ஹிட்டாவதில்லை. மக்களுக்கு சில பாடல்கள் பிடிக்காமல் போகிறது. அது ஏன் என்பதை விமர்சனங்கள், ரசிகர்களின் கமெண்டுகள் மூலம் அறிந்து கொண்டு என்னை மாற்றிக் கொள்வேன். என்றார்.