மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போலே படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதைத் தொடர்ந்து தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து விஜய், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். கவர்ச்சி கதாநாயகி என்கிற அளவிலேயே அறியப்பட்ட மாளவிகா தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாக தயாராகி வரும் தங்கலான் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக தினசரி மேக்கப்பிற்கு மட்டுமே குறைந்தபட்சம் நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் பொறுமையாக செலவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மாளவிகா மோகனன். அது மட்டுமல்ல இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கண் மருத்துவர், தோல் மருத்துவர் என கிட்டத்தட்ட ஐந்து வித மருத்துவர்களை நான் சந்தித்து சிகிச்சை பெற வேண்டி இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.