வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

33வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் துவங்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்த துவக்க நாள் விழாவில் நடிகர் சிரஞ்சீவி அவருடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, மகன் ராம் சரண், மருமகள் , பேத்தி உபாசானா, பேத்தி கிலின் காரா ஆகியோருடன் லண்டன் சென்று அங்கு ஓய்வெடுத்து வந்தார்கள்.
அங்கிருந்து பாரிஸ் சென்று ஒலிம்பிக்ஸ் துவக்க நாள் விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி மனைவி சுரேகாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. சுரேகாவுடன் ஒலிம்பிக்ஸ் ஜோதியின் பிரதியை வைத்திருக்கும் மகிழ்ச்சியான தருணம். எங்களின் பெருமைமிகு இந்தியக் குழுவின் ஒவ்வொரு வீரரருக்கும், எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பதக்கப் பட்டியலைப் பெற வாழ்த்துகிறோம், கோ இந்தியா, ஜெய்ஹிந்த்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் மருமகளும், ராம்சரண் மனைவியுமான உபாசானா சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.