சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அரசியல் களத்தில் பிற்காலத்தில் எதிரெதிராக நின்ற கருணாநிதியும், ஜெயலிதாவும் எம்.ஜி.ஆர் நடித்த 'நீரும் நெருப்பும்' படத்தை சென்னை தேவி பேரடைஸ் தியேட்டரில் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பார்த்த வரலாற்று நிகழ்வு நடந்தது. இதனால் அந்தசமயம் தியேட்டர் வாசல் முன் எம்.ஜி.ஆர் ரசிகர்களும், கருணாநிதி ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்றதால் பெரும் போலீஸ் படை பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளுடன் போலீசார் தயாராக இருந்தனர். இப்படியாக ஒரு பாதுகாப்பு அதற்கு முன்பும், பின்பும் தியேட்டர் வாசலில் போடப்பட்டதில்லை.
'நீரும் நெருப்பும்' படம் புகழ்பெற்ற 'தி கோர்சிகன் பிரதர்ஸ்' என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. தந்தையை கொன்றவர்களை மகன்கள் வளர்ந்து பழிவாங்குவதுதான் கதை. மணிவண்ணன், கரிகாலன் என்ற 2 கேரக்டர்களில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். ஒரு வேடத்தில் கருப்பான தோற்றம் கொண்டவராக நடித்தார். ஜெயலலிதா ஹீரோயின். இவர்களுடன் , சோ, தேங்காய் சீனிவாசன், ரி.கே.பகவதி, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், சதன், கரிக்கோல் ராஜ், சி.எஸ்.பாண்டியன், குண்டுமணி, ஜஸ்ரின், ஜெயக்கொடி நடராஜ அய்யர், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், உசிலைமணி, மனோரமா, ஜி.சகுந்தலா, சண்முகசுந்தரி, உட்பட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படத்தின் வாள் சண்டை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக தொழில்நுட்பம் வளராத காலத்தில் இரண்டு எம்.ஜி.ஆரும் சண்டையிடும் காட்சிகள் நுட்பமாக படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எம்.ஜி.ஆர் கருப்பு நிறத்தில் நடித்ததையும், கதைப்படி இறந்து போதையும் மக்கள் விரும்பவில்லை.