எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
விக்ரம் நடித்துள்ள படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வருகிற 15ம் தேதி வெளிவருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது.
இந்த விழாவில் விக்ரம் பேசியதாவது : அந்தியன், பிதாமகன், ஐ, ராவணன் படங்களில் நான் கஷ்டப்பட்டு நடித்ததாக சொல்வார்கள். ஆனால் தங்கலான் படத்திற்கு நான் பட்ட கஷ்டத்தை ஒப்பிடும்போது அதெல்லாம் கஷ்டமே இல்லை. என் நடிப்பு பற்றி நானே பெருமைபட்டுக் கொள்ள மாட்டேன். ஷங்கர், மணிரத்னம், தரணி, பா.ரஞ்சித், ஏ.எல்.விஜய் மாதிரியான இயக்குனர்கள் என் நடிப்பை கொண்டு வந்தார்கள். அந்த பெருமை அவர்களையே சாரும்.
நடிப்புதான் என் உயிர். பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் முதல் 3 ரேங்குகளுக்குள் இருந்தேன். நடிப்பு ஆசை வந்த பிறகு கடைசி 3 ரேங்கிற்குள் வந்தேன். பள்ளி, கல்லூரியில் நாடகங்களில் நடித்து நடிப்பு வெறியை தணித்தேன். வீட்டில் உள்ளவர்கள் நடிப்பை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த சொன்னார்கள்.
விபத்தில் சிக்கினேன் கால் முறிந்தது, 23 இடத்தில் ஆபரேஷன், 3 வருடம் படுக்கையில் கிடந்தேன். என்னால் இனி நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். காலை துண்டிக்காமல் விட்டதே பெரிய விஷயம் என்றார்கள். ஆனால் நான் தளரவில்லை இரண்டு குச்சி ஊன்றி நடந்தேன், அப்புறம் ஒரு குச்சி ஊன்றி நடந்தேன். பின்னர் காலால் நடந்தேன். அடுத்த நிமிடமே சினிமா வாய்ப்பு தேடினேன். வீட்டு செலவுக்காக கிடைத்த வேலைகளுக்கு சென்றேன்.
10 வருட போராட்டத்திற்கு பிறகுதான் சினிமா என் கைக்கு வந்தது. அன்றைக்கு நான் தளர்ந்திருந்தால், முயற்சியை கைவிட்டிருந்தால் இன்றைக்கு இந்த மேடையில் நின்று கொண்டிருக்க மாட்டேன். ஒரு லட்சியத்தை அடையவேண்டும் என்றால் அதை நோக்கிய பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேளை நான் சினிமாவில் ஜெயித்திருக்காவிட்டால் இன்னும் வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்திருப்பேன். ஒரு போதும் நடிப்பில் இருந்து விலகி இருக்க மாட்டேன்.
பொதுவாக ஒரு கதையை எழுதிவிட்டு இந்த கேரக்டரில் நடியுங்கள் என்றுதான் இயக்குனர்கள் என்னிடம் வருவார்கள். ஆனால் முதன் முறையாக எனக்காக எழுதப்பட்ட கேரக்டர்தான் தங்கலான். இதில் நான் நடிக்க முக்கிய காரணம் நான்தான் தங்கலான். எனக்குள் இருந்த போர்குணம், விடா முயற்சி, வெறி எல்லாமே தங்கலானுக்கும் இருந்தது. உடன் இருந்தவர்கள் அவனை உன்னால் முடியாது விட்டுவிடு என்று சொன்ன போதும் தங்கலான் தொடர்ந்து போராடினான். தன் மக்களுக்காக தன் குடும்பத்துக்காக போராடினான். என்னையே அவர் எதிரொலித்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.