தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
பெரும்பாலும் பிரபல நடிகர்களின் வாரிசுகள் பெற்றோரை போலவே தாங்களும் நடிகராக களம் இறங்கி வரும் வேளையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் இதிலிருந்து விலகி தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகரை போல இயக்குனராக மாறியுள்ளார். வெளிநாடு சென்று இதற்கான படிப்பை படித்துவிட்டு வந்த ஜேசன் சஞ்சய் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கும் முன்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இவரது தாத்தா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
அதே சமயம் வயதானாலும் கூட தற்போதும் டைரக்ஷன் மீதான ஆர்வம் குறையாமல் 'கூரன்' என்கிற படத்தை தற்போது இயக்கி வருகிறாராம் எஸ் ஏ சந்திரசேகர். அவரது ஆரம்பகால படங்களில் அதிகம் இடம் பெற்று நடித்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன் எஸ்.ஏ.சி படம் இயக்கும் தகவலையும் தற்போது தெரியப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஒரே நேரத்தில் திரை உலகில் தாத்தாவும் பேரனும் படம் இயக்குகிறார்கள் என்பது அதிசயமான ஒன்றுதான்.