மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சண்டை காட்சிகளில் எவ்வளவு பெரிய ரிஸ்க் வேண்டுமானலும் எடுக்கும் எம்ஜிஆருக்கு நடன காட்சிகள் என்றால் பயம். பெரும்பாலும் தனது படங்களில் வரும் பாடல்களில் தனக்கென்று இருக்கும் பிரத்யேக சில ஸ்டெப்களை வைத்து பாடலை முடித்து விடுவார். நடன இக்குனர்களும் அவருக்கேற்ற சில நடன அசைவுகளை வைத்திருப்பார்கள், அதனை வேறு யாருக்கும் பயன்படுத்தவும் மாட்டார்கள்.
இதையும் மீறி அவ்வப்போது சில படங்களின் பாடல்களில் நடனத்தில் அசத்தியிருப்பார் எம்ஜிஆர். அந்த படங்களில் ஒன்று 'குடியிருந்த கோவில்'. எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களை இயக்கிய இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் 1968ம் ஆண்டு வெளியான படம் இது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஜெயலலிதா, ராஜஸ்ரீ, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக எம்ஜிஆர் பஞ்சாபி நடனம் ஆடிய “ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்...” என்ற பாடல் இன்றவுளம் பாடப்பட்டும் மேடைகளில் ஆடப்பட்டும் வருகிறது. ஆலங்குடி சோமு எழுதிய இந்த பாடலுக்கு பஞ்சாபி நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்த இயக்குனர் சங்கர், அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவர் முடியவே முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு வழியாக எம்.ஜி.ஆர் ஒப்புக் கொண்டார். பஞ்சாபி நடன கலைஞர்களிடம் ஒரு வாரம் வரை முறையான பயிற்சி பெற்று இந்த பாடலுக்கு ஆடினார். அது பெரும் வரவேற்பை பெற்றது. குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றுக் கொடுத்தது.