தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அறிவியல் கலை கண்டுபிடிப்பான சினிமா முதலில் பேசியது மவுனம்தான். பின்னர் அறிவியில் சினிமாவை பேச வைத்தது. சினிமாவும் மவுனம் கலைத்து பல கதைகளை பேச ஆரம்பித்தது.
இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவும், கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் மயிலாப்பூர் நாகேஷ்வரராவ் பூங்காவில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது மவுனபடங்கள் கால சினிமா பற்றி அவர்களது பேச்சு திரும்பியது. அப்போது கமல் கேட்டார் “நாம் ஏன் ஒரு மவுன படத்தை உருவாக்க கூடாது” என்றார். அதற்கு சிங்கீதம் “இதென்ன பிரமாதம் பண்ணிட்டா போச்சு”. இப்படித்தான் 'பேசும் படம்' உருவானது. கன்னடத்தில் 'புஷ்பக விமானா'.
மவுன படங்களின் கதை முடிந்து, சரியாக 50 ஆண்டுகளுக்கு பிறகு உருவானது இந்த படம். கமல்ஹாசன், அமலா, டினு ஆனந்த், பிரதாப் போத்தன், உள்பட பலர் நடித்திருந்தார்கள். எல்.வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். கவுரி சங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படம் காதல் படம் என்றாலும் அதிலும் திரில்லர் ஜானர் இருந்தது. இந்த படத்தில் கமலின் நடிப்பு சார்லி சாப்ளின் சாயலில் இருந்தது என்பார்கள். பொதுவாக மவுன படங்களின் கதை ஒரு வீட்டுக்குள், அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நடக்கும். ஆனால் இந்த படத்தில் குடிசை பகுதி, பரபரப்பான நகரின் மைய பகுதி என எல்லா இடத்திலும் நடந்தது.
தமிழ்நாட்டில் 100 நாட்கள் ஓடிய படம் கர்நாடக மாநிலத்தில் 36 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றது. கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. புனே திரைப்படக் கல்லூரியின் பாடத் திட்டத்தில் 'பேசும் படம்' இடம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் கமல்ஹாசன் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர். அந்தச் சாதனை வரிசையில் 'பேசும் படம்' முக்கியமானது.