தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷை வைத்து படம் தயாரிக்கப் போகிறவர்கள் சங்கத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்று அதற்கேற்றபடி நடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசப்பட்டது.
இதனிடையே, நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருடன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட சில முக்கிய சங்கங்கள் அடங்கிய கூட்டுக் கூட்டத்தின் முடிவுப்படி நவம்பர் 1 முதல் நடத்த உத்தேசித்துள்ள திரைப்பட வேலை நிறுத்த அறிவிப்பு பற்றியும் விவாதித்துள்ளார்களாம்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார்கள். அதில் சிலவற்றிற்குத் தீர்வு கண்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன்படி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் படம் நடித்துத் தர சம்மதிப்பதாக தனுஷ் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
அவரது தயாரிப்பில் தனுஷ் இயக்கம் நடிப்பில் சரித்திரப் படம் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. நாகார்ஜூனா உள்ளிட்டவர்களும் அதில் நடித்து வந்த நிலையில் படம் திடீரென நிறுத்தப்பட்டது. இப்போது அப்படத்திற்குப் பதிலாக புதிய கதை ஒன்றில் நடித்துத் தருகிறேன் என தனுஷ் சொன்னதால் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாம். மற்ற சில தயாரிப்பாளர்களிடம் தனுஷ் வாங்கிய அட்வான்ஸ் குறித்தும் பேசினார்களாம். அவற்றிற்கு என்ன தீர்வு என்பது விரைவில் தெரிய வருமாம்.
நேற்றைய முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் இரண்டு பக்கமும் மகிழ்ச்சி என்கிறார்கள். எனவே, வேலை நிறுத்தப் பற்றிய அறிவிப்புகளை பேச்சு வார்த்தைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரவும் இரு தரப்பிலும் இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது.