சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள பட ஷூட்டிங்கின் போது கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோவாக எடுத்து நடிகர்கள் செல்போனில் ரசிப்பதாக பிரபல நடிகை ராதிகா பகீர் குற்றம்சாட்டி உள்ளார்.
பற்ற வைத்த பாலியல் புகார்கள்
கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை பெண் கலைஞர்கள் சுமத்தி உள்ளனர். மல்லுவுட் திரையுலகையே விழி பிதுங்க வைத்துள்ள இந்த விவகாரம் மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
வழக்குகள்
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மோகன்லால், உள்ளிட்ட பிரபல நடிகர்கள் திரைப்பட சங்க பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர். நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவாகி இருக்கிறது.
நடிகை பேட்டி
இந் நிலையில் பிரபல நடிகை ராதிகா சரத்குமார் கேரள திரையுலகில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு முக்கியமான விஷயத்தை தற்போது வெளிக் கொண்டு வந்துள்ளார். கேரள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை அவர் கூறி உள்ளார்.
கேரவன் கேமரா
நடிகை ராதிகா சரத்குமார் கூறி இருப்பதாவது: கேரளாவில் படப்பிடிப்பின்போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். பின்னர் அந்த வீடியோக்களை அங்கே படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர்.
ஓட்டல் அறை
இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் கண்டுள்ளேன். அதனால் தான் பயந்து போய் ஓட்டலில் அறை எடுத்து, அங்கே சென்று நான் உடை மாற்றிக் கொண்டு படப்பிடிப்புத்தளத்துக்கு வருவேன். அதன் பின்னர், நானே பலமுறை எனக்கு தெரிந்த நடிகைகளிடம் கேரவன் உள்ளே போய்வரும் போது கவனமாக போகுமாறு கூறி இருக்கிறேன்.
எனக்கு தெரியும்
படப்பிடிப்பின் போது நிறைய நடிகைகளின் அறைக்கதவுகளை பலர் தட்டுவதை பார்த்து இருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற தொந்தரவுகளை தாங்காமல் எனது அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்ட தருணங்களும் உண்டு. இன்று சில நடிகைகள் எங்களுக்கு எந்த சம்பவமும் இதுபோன்று நடக்கவில்லை என்கின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. அவர்களுக்கு நடந்தது என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி உள்ளார்.