தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தை இயக்கி 1000 கோடி வசூலைப் பெற வைத்தவர் தமிழ்சினிமாவைச் சேர்ந்த அட்லி. அந்தப் படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜூன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், கதையில் சில மாற்றங்களை அல்லு அர்ஜூன் சொன்னதால் அந்தக் கூட்டணி ஆரம்பத்திலேயே பிரிந்துவிட்டது என்றார்கள். இதையடுத்து சல்மான் கானை சந்தித்து அட்லி கதை சொல்லி, அது சல்மான் கானுக்குப் பிடித்துவிட அட்லி - சல்மான் கூட்டணி வரப் போகிறது என்று தகவல் வந்தது.
அதன் பின் அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொண்டார்கள். கதையைக் கேட்ட கமல்ஹாசன் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என்பது லேட்டஸ்ட் தகவலாக வெளியாகி உள்ளது.
அக்டோபர் முதல் படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து, ஜனவரி 2025 முதல் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். தற்போது ஹிந்தியில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான். மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். அதற்குப் பிறகு 'இந்தியன் 3' படத்திற்காக சில வாரங்கள் நடிக்க உள்ளதாகத் தகவல். அதை முடித்ததும் ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்க உள்ள படத்தில் நடித்துக் கொண்டே, அட்லி படத்திலும் நடிக்கலாம். 2025ம் ஆண்டின் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக அட்லி, கமல்ஹாசன், சல்மான் கான் படம் அமைய உள்ளதாம்.