தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய்யின் கடைசி படமான விரைவில் உருவாக உள்ள அவரது 69வது படத்திற்கு முன்பாக அவரது 68வது படமாக கடந்த வாரம் வெளிவந்த படம் 'தி கோட்'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதற்கடுத்து இரண்டு, மூன்று, நான்கவாது நாட்களின் வசூல் என்ன என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இருந்தாலும் சுமார் 250 கோடியைக் கடந்த வசூலாக இருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழகத்தில் மட்டும் இப்படம் நான்கே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் என்றால் அது படத்தின் லாபக் கணக்கைத் துவங்கிவிட்டது என்றும் சொல்கிறார்கள். வார நாளான இன்றும் கூட பல தியேட்டர்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு ஹவுஸ் புல் ஆகியுள்ளது.
முதல் நாளைத் தவிர மற்ற நாட்களுக்கான வசூல், தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கான வசூல் விவரங்களை ஏன் இன்னும் வெளியிடவில்லை என தயாரிப்பு நிறுவனத்திடம் விஜய் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அனேகமாக இன்று அல்லது நாளை இந்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.