'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! |

பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், ஒரு பக்க கதை, என்னை நோக்கி பாயும் தோட்டா, வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் என பல படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். சமீபத்தில் தனது காதலரான சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்த மேகா ஆகாஷ், திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு முந்திய சடங்கான மெஹந்தி நிகழ்ச்சியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வருங்கால கணவருடன் தான் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் மேகா ஆகாஷ்.