தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கங்குவா'. திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக் ஷன் கலந்த பேண்டஸி படமாக பிரமாண்ட பொருட் செலவில் தயாராகி உள்ளது. இரண்டு பாகமாக உருவாகும் இந்த படத்தின் முதல்பாகம் அக்., 10ல் ரிலீஸ் என அறிவித்து இருந்தனர்.
ஆனால் அந்தசமயம் ரஜினியின் ‛வேட்டையன்' படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் பணிகளும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். கங்குவா படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் சூர்யாவும் இணைந்து கவனித்து வருகிறார்.
இந்நிலையில் நவ., 14ல் ‛கங்குவா' ரிலீஸ் ஆவதாக ஒரு சிறு புரொமோ வீடியோ உடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் சூர்யா, பாபி தியோலின் ஸ்டில்கள் இடம் பெற்றுள்ளன.