ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தவர், விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளார். இதற்கிடையே பாப் பாடகி கெனிஷா உடன் ஜெயம் ரவியை தொடர்புபடுத்தி செய்திகள் வர தொடங்கின. தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். வரும் தீபாவளி வெளியீடாக அக்., 31ல் படம் ரிலீஸாகிறது.
இப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் ஜெயம் ரவி பேசினார். பிரதர் படத்தில் வக்கீலாக நடித்துள்ளேன். உறவுகளை பற்றி பேசும் படம். குறிப்பாக அக்கா - தம்பி இடையேயான பாசத்தை சொல்கிற படம். மக்காமிஸி பாடலுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த பாடலுக்கு என் கால் உடைந்து விடும் அளவுக்கு ஆட விட்டுவிட்டார். படம் நன்றாக வந்துள்ளது என்றார்.
தொடர்ந்து தனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் பற்றியும் மனம் திறந்தார். அவர் கூறுகையில், ‛‛விவாகரத்து விஷயம் வருத்தம் அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன் குடும்பத்தில் சில பிரச்னைகள் எழுந்தன. சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் அதை சொல்ல முடியாது. என் பசங்களுக்காக நான் எதையும் பேச வேண்டாம் என நினைக்கிறேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே பிரியும் முடிவை எடுத்துவிட்டேன் அவருக்கு (மனைவி ஆர்த்தி) நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். அவுங்க அப்பாவும் வந்து பேசினார். அப்படி இருக்கையில் விவாகரத்து பற்றி அவருக்கு தெரியாது என எதற்காக சொன்னார் என தெரியவில்லை.
விவாகரத்து விஷயம் வருத்தம் தான் என்றாலும் அது என் சினிமா வாழ்க்கையை பாதிக்காது. அப்பா, அம்மா நான் நல்லா இருக்கணும் தான் நினைக்கிறாங்க. என் முடிவை ஏற்றுக் கொண்டார்கள். என் மகன்கள் என்னோடு தான் இருக்கிறார்கள். என் மூத்த பையனிடம் நாங்க பிரிவது பற்றி புரியும்படி பேசியிருக்கிறேன். அவர் ஓரளவுக்கு புரிந்து கொண்டுள்ளார். உண்மை ஒருநாள் கோர்ட் மூலம் வெளிவரும். இந்த கார், வீடு எல்லாமே நான் உழைத்து, ரத்தம் சிந்தி சிம்பாதித்தது. சோறு போடும் ரசிகர்களுக்கு முடிந்தவரை நான் உண்மையாக இருக்கிறேன என்றார்.
பாடகி கெனிஷா பற்றி கூறுகையில், அந்த பொண்ணு பெங்களூருவை சேர்ந்தவர். அவருக்கு அப்பா, அம்மா கிடையாது. ரொம்ப நல்ல பொண்ணு. நடிகர் ஜீவா ஒரு ஆல்பம் பண்ணினார். அந்த ஆல்பம் விழாவில் தான் அவர் எனக்கு பழக்கம் ஆனார். பாடகி தாண்டி அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். உளவியல் ரீதியாக தனது பேச்சுமூலம் நிறைய பேரை குணப்படுத்தி உள்ளார். நாங்க இரண்டு பேரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஸ்பிரிச்சுவல் சென்டர் மாதிரி கூட ஆரம்பிக்கலாம் என்று இருந்தோம். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க, அந்த பெண்ணை பற்றி மட்டும் அவதூறாக பேசாதீங்க.
நான் வீட்டை விட்டு போனது உண்மைதான். எனது காரை எடுத்துக்கொண்டு, பணம் கூட எடுக்காமல்தான் சென்றேன். . ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசினர். அவருக்கு நிச்சயமாகி போய் விட்டார். அதற்குள் என் மீது சேற்றை வாரி இறைக்க சிலர் நினைக்கிறார்கள். அதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. காரணம், என்னைப் பற்றி, எனக்கு இந்த இடத்தை கொடுத்த மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேவையில்லாமல் இழுக்காதீர்கள்
இந்நிலையில் 'பிரதர்' படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ஜெயம் ரவியிடம் பாடகி கெனிஷா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது: நான் ஒன்றேயொன்றுதான் சொல்ல விரும்புகிறேன். இதில் யாரையும் இழுக்காதீர்கள். வாழு வாழவிடு. கெனிஷா 600 மேடைகளில் பாடியுள்ளார்கள். தனியாக நின்று வளர்ந்தவர். பல உயிரைக் காப்பாற்றிய ஹுலர் (குணப்படுத்துபவர்). சான்றிதழ் பெற்ற உளவியலாளர். அவரை இப்படி இழுக்காதீர்கள்.
நானும் கெனிஷாவும் இணைந்து வருங்காலத்தில் ஒரு ஹுலிங் சென்டர் (குணப்படுத்தும் மையம்) அமைக்கவிருக்கிறோம். பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதைக் கெடுக்காதீர்கள். அதை யாரும் கெடுக்கவும் முடியாது. தேவையில்லாமல் அவரை இழுக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.