மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். 'தி பைரேட் ஆப் தி கரீபியன்' படத் தொடரில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். நடிகை ஆம்பர் ஹெட்டை காதலித்து 2015-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஜானி டெப் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக ஆம்பர் ஹெட் புகார் அளித்தார். இதனால் ஜானிடெப் 'பைரேட் ஆப் தி கரீபியன்' படத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் வழக்கில் இருந்து ஜானி டெப் விடுவிக்கப்பட்டதோடு, அவரது மனைவிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. இந்த அபராத தொகையை ஜானி டெப் வேண்டாம் என்று கூறினார். இதை தொடர்ந்து அவர் மீண்டும் ஜாக்ஸ்பெரோ கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். 1997ல் 'தி பிரேவ்' படத்தை இயக்கினார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் 'மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்' படம் வெளியானது.
இந்த நிலையில் ஜானி டெப்புக்கு இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.